நெஞ்சை உலுக்கும் சம்பவம் - தாய் யானையின் பாசப் போராட்டம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பென்னை வனத்தில் சில தினங்களுக்கு முன்பு 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை இறந்து கிடந்தது. குட்டி யானையின் உடலைக் கைப்பற்ற வனத்துறையினர் முயன்ற போது, காட்டு யானைகள் வனத்துறையினரைத் துரத்தின. அதனைத் தொடர்ந்து யானைக் கூட்டம் இறந்த குட்டியானையை சுற்றி நின்று கொண்டன.

முதுமலை பென்னை வனத்தில் இறந்த குட்டியின் அருகிலேயே நின்று யானைக்கூட்டம் பாசப் போராட்டம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பென்னை வனத்தில் சில தினங்களுக்கு முன்பு 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை இறந்து கிடந்தது. குட்டி யானையின் உடலைக் கைப்பற்ற வனத்துறையினர் முயன்ற போது, காட்டு யானைகள் வனத்துறையினரைத் துரத்தின. அதனைத் தொடர்ந்து யானைக் கூட்டம் இறந்த குட்டியானையை சுற்றி நின்று கொண்டன. இதனால் வனத்துறையினரால் குட்டி யானைக்கு அருகே செல்லமுடியவில்லை.

யானை கூட்டம் குட்டி யானையின் உடலை விட்டுச் செல்லும் என வனத்துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை அப்பகுதியை விட்டு காட்டு யானைகள் செல்லவில்லை. பென்னை பகுதியில் இறந்த குட்டியின் அருகில் யானை கூட்டம் காத்திருந்து பாசப் போராட்டம் நடத்தி வருவது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
newstm.in

