Theme Check

நெஞ்சை பதற வைக்கும் செய்தி..!! அழவும் முடியாது, குளிக்கவும் முடியாது.. அவதிப்படும் 15 வயது இளம்பெண்!!

நெஞ்சை பதற வைக்கும் செய்தி..!! அழவும் முடியாது, குளிக்கவும் முடியாது.. அவதிப்படும் 15 வயது இளம்பெண்!!

நெஞ்சை பதற வைக்கும் செய்தி..!! அழவும் முடியாது, குளிக்கவும் முடியாது.. அவதிப்படும் 15 வயது இளம்பெண்!!
X

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டக்ஸான் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் அபிகெயில் பெக் என்பவர் தான் அத்தகைய ஒவ்வாமையால் அவதியடைந்து வருகிறார். அதன்படி அவர் மேல் தண்ணீர் பட்டாலே வலியுடன் கூடிய அரிப்பு ஏற்பட்டு விடும். மேலும், கண்ணீர் பட்டால் கூட முகம் சிவந்து விடுமாம். இதனால், அந்தப் பெண் குளிக்கவோ, சோகத்தில் அழவோ முடியாது.

இவர் பிறக்கும்போது மற்ற எல்லோரையும் போல சராசரி குழந்தையாகத் தான் 12 வயது வரை இருந்தார் அபிகெயில் பெக். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டில் 13 வயதில் இருந்து தான் இத்தகைய அரிய பிரச்சினைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. அதே சமயம், தண்ணீர் பட்டாலே அலர்ஜி என்ற தீவிரத்தன்மை கடந்த மாதம் தான் உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக மனிதர்கள் உடம்பில் ஆசிட் பட்டால் எப்படி எரிச்சல் ஏற்படுமோ, அதுபோல் தான் அபிகெயிலுக்கு தண்ணீர் பட்டாலே எரிச்சலும், அரிப்பும் ஏற்படுமாம். இதனால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதுவே, குடிநீர் என வருகிறபோது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தண்ணீர் குடித்ததே இல்லையாம்.

குடிநீர் அருந்தினால் உடனடியாக வாந்தி வரும் என்கிறார் அபிகெயில். குடிநீருக்குப் பதிலாக தினசரி மாதுளம் பழச்சாறு அல்லது தண்ணீர் சத்து குறைவாக உள்ள பிற சத்து பானங்களை இவர் அருந்தி வருகிறார். உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்வதில்லை என்பதால், அதை ஈடு செய்வதற்கு மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்.

Abigail-Beck

இது குறித்து அபிகெயில் கூறுகையில், எனது கண்ணீர் கூட எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. முகம் சிவந்து போய், கடுமையாக எரிச்சல் ஏற்பட்டு விடும். தண்ணீர் அருந்தினால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும் என கூறியுள்ளார்.

அபிகெயில் முன்னரெல்லாம் தன் பிரச்சனையை பற்றி வெளியில் பேசமாட்டார். ஆனால் இப்போது தன் நிலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் அதைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ளவும் இவ்வாறு செய்வதாக கூறுகிறார்.

Tags:
Next Story
Share it