Theme Check

நெஞ்சை உலுக்கும் சோகம்.. தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி !!

நெஞ்சை உலுக்கும் சோகம்.. தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி !!

நெஞ்சை உலுக்கும் சோகம்.. தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி !!
X

யாருமே எதிர்பாராத வகையில் ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கியது. கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரும் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரும் உடல்களும், இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில், பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

heli army

இதைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் தனி தனி ஆம்புலன்சில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் ரணுவ விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ராணுவ வீரர்கள் கணத்த முகத்துடன் ராணுவ மரியாதையுடன் அவர்களின் உடல்களை டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுச்சென்றனர். முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன.

army

பின்னர் தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது இரு மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

தொடர்ந்து முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

s

இதனையயடுத்து விபின் ராவத் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அத்துடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறுதல் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it