தமிழகத்தில் தகிக்கும் வெப்பம்.. 5 நகரங்களில் வெயில் சதம் !!
தமிழகத்தில் தகிக்கும் வெப்பம்.. 5 நகரங்களில் வெயில் சதம் !!

தமிழகத்தில் நேற்று மட்டும் 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் பிரதிபலிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது. அந்த நிலை தற்போதும் தொடங்குகிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 5 பகுதிகளில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமாக, வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருத்தணியில் 102 டிகிரியும், கரூா் பரமத்தி, திருச்சியில் தலா 101 டிகிரியும், ஈரோட்டில் 100 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், சேலத்தில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 95 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் அளவும் பதிவானது.
வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணியவும், அதிகளவு தண்ணீர், பழச்சாறுகளை அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதியம் நேரத்தில் அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

