தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
X

தமிழகத்தில் வரும் 21ம் தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை நீலகிரி, கோவை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

rain

அதே போல் நாளை மறுதினம் ஆகஸ்ட் 21ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 22ம் தேதி, திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

rain 4

ஆகஸ்ட் 23ம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it