Theme Check

கொட்டிய கனமழை.. ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு !!

கொட்டிய கனமழை.. ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு !!

கொட்டிய கனமழை.. ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு !!
X

மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் பெரும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழை நீடிக்கும் என்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழையின் போது மின்னல் தாக்கியதில் பல மாவட்டங்களில் மக்கள் சிலர் உயிரிழந்தனர். அதாவது மின்னல் தாக்கி ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர்.

fg

இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலா 4 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மோசமான காலநிலையில் முழு விழிப்புடன் இருக்கவும், இடியுடன் கூடிய மழையைத் தடுக்க அவ்வப்போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், என்று தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it