Theme Check

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!
X

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை நீடிக்கும் சென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 17.07.2022 இன்று முதல் 19.07.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை(மலைப்பகுதிகள்) தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

rain

மேலும் 20.7.2022 முதல் 21.7.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேநேரத்தில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it