2015க்கு பிறகு சென்னையில் அதிக மழை பொழிவு!!
2015க்கு பிறகு சென்னையில் அதிக மழை பொழிவு!!

2015க்கு ஆண்டுக்குப் பிறகு சென்னையில் இந்த வருடத்தில்தான் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 7 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி என பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எம்.ஆர்.சி நகரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 2 மணிநேரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 2015க்கு ஆண்டுக்குப் பிறகு சென்னையில் இந்த வருடத்தில்தான் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2015ஆம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். 1996, 2005ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அதிகபடியான மழை நாட்களைக்கொண்ட ஆண்டாக இந்தாண்டு இருந்ததாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
2015 annual rainfall is overtaken by 2021 & is the 3rd wettest year of all time behind 2005 & 1996
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 30, 2021
All Time yearly rainfall for Chennai city (Nunga)
---
2005 - 2566 mm
1996 - 2451 mm
2021 - 2174 mm till 5.30 pm today
1943 - 2111 mm
2015 - 2095 mm
1847 - 2052 mm
1997 - 2035 mm
newstm.in

