Theme Check

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை.. தண்டவாளங்கள் மூழ்கின.. சாலைகளை காணவில்லை !! தெருக்களில் வெள்ளப்பெருக்கு.. வீடியோ!

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை.. தண்டவாளங்கள் மூழ்கின.. சாலைகளை காணவில்லை !! தெருக்களில் வெள்ளப்பெருக்கு.. வீடியோ!

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை.. தண்டவாளங்கள் மூழ்கின.. சாலைகளை காணவில்லை !! தெருக்களில் வெள்ளப்பெருக்கு.. வீடியோ!
X

தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. டெல்லி, மும்பையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல்வேறு இடங்களில் 120 மிமீ மழை பெய்துள்ளது.

அதன்பின் இரவு நேரத்திலும் விடாமல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீரில் மிதந்தப்படி வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் அங்கு மேலும் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செம்பூர், விக்ரோளி பகுதியில் கனமழையால் சுவர் சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. செம்பூர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள்.

விக்ரோளி பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலியானார்கள். நேற்று இரவு இந்த சம்பவங்கள் நடந்தாலும், அப்போது மழை பெய்ததாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.


newstm.in

Tags:
Next Story
Share it