Theme Check

ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப் பணிக்கு போர்வை.. பொதுமக்களுக்கு டிஜிபி பாராட்டு..!

ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப் பணிக்கு போர்வை.. பொதுமக்களுக்கு டிஜிபி பாராட்டு..!

ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப் பணிக்கு போர்வை.. பொதுமக்களுக்கு டிஜிபி பாராட்டு..!
X

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் போது, மீட்புப் பணிக்கு கம்பளி போர்வைகள் வழங்கிய கிராம மக்களுக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு புதிய கம்பளி போர்வைகள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், முப்படை தளபதி பிபின் ராவத் வந்த ஹெலிகாப்டர் கடந்த 8ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியின்போது, உள்ளூர் மக்கள் கம்பளி போர்வை மற்றும் தேவையான பொருட்களை வழங்கி உதவினர். அப்பகுதி மக்களுக்கு, போலீஸ் துறை சார்பில் கம்பளி மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: முப்படை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட போது நஞ்சப்பாசத்திரம் பகுதி மக்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். ஜெயசீலன் என்பவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக, முதல்வருக்கு தகவல் தெரிவித்தோம்.

பகல் 12:25 மணிக்கு உடனடியாக செயல்பட்ட போலீஸ் துறையினர், தீயணைப்பு துறையினர், தடயவியல் துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிரமமான சூழ்நிலையில், ஊர்மக்கள் வீட்டில் இருந்த கம்பளி போர்வைகளை கொடுத்து உதவினர். அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். சம்பவம் குறித்து அப்பர் குன்னூர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it