Theme Check

இனி, வாகன விபத்துகள் குறையும்.. வந்தாச்சு புதிய டெக்னாலஜி..!

இனி, வாகன விபத்துகள் குறையும்.. வந்தாச்சு புதிய டெக்னாலஜி..!

இனி, வாகன விபத்துகள் குறையும்.. வந்தாச்சு புதிய டெக்னாலஜி..!
X

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சமீப காலங்களாக வாகன விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து, கார்களின் வேகத்தை குறைக்கும் புதிய டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய எலக்ட்ரானிக் சிஸ்டம், புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். மேலும், இதனை பழைய கார்களிலும் பொருத்திக் கொள்ளலாம்.
The European Union will require all new cars to be equipped with speeding  prevention technology by 2024 | gagadget.com
இந்த எலக்ட்ரானிக் சிஸ்டம், குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் டிரைவர்களுக்கு எல்இடி திரையில் விஷுவல் எச்சரிக்கை சிக்னல் காட்டுவதோடு மட்டுமல்லாமல் காலுக்கு கீழே பொருத்தப்படும் கியாஸ் பெடல் மெலிதான வைப்ரேஷனை வெளியிடும். இந்த வைப்ரேஷனை காலில் உணரும் டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தும் வேகத்தை குறைப்பார்.

நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து வாகனங்களிலும் இந்த சிஸ்டம் பொருத்தப்பட்டால் அனைத்து கார்களும் சீரான வேகத்தில் செல்லும். இதனால், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறையும் என ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story
Share it