புறணி பேசி... புறணி பேசி.. தேசியளவில் டிரெண்டிங்கான #ஸ்வேதா..!
புறணி பேசி... புறணி பேசி.. தேசியளவில் டிரெண்டிங்கான #ஸ்வேதா..!

நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வு, விளம்பரதாரர் ப்ரோமோஷன் என பல்வேறு டிரெண்டிங் செய்திகளுக்கு மத்தியில், சம்மந்தமே இல்லாமல் #Shweta என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கில் இருந்தது. எதற்காக இந்த ஹேஷ்டேக் டிரண்டிங்கில் உள்ளது என்று கிளிக் செய்து பார்த்தவர்கள், விஷயத்தை தெரிந்துகொண்டதும் தரையில் விழுந்து புரண்டு சிரித்தனர்.
ஒரு ஆன்லைன் வகுப்பின் போது, ஒரு உரையாடல் பதிவுசெய்யப்படுகிறது. அதை இணையதளத்தில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் தேசியளவிலான ட்விட்டர் டிரெண்டிங்கில் அது நான்காவது இடத்தை பெற்றது. அந்த ஹேஷ்டேக்கின் பின்னணி விபரங்களை பார்க்கலாம்.
பள்ளியில் படித்து வரும் ஸ்வேதா என்கிற மாணவி வழக்கம் போல ஆன்லைன் வகுப்பில் இருந்துள்ளார். அவரது வீடியோ அணைக்கப்பட்டு, ஸ்பீக்கரும் அணைக்கப்படுகிறது. மாணவி பாடத்தை தான் கவனிக்கிறார் என ஆசிரியரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது தான் மாணவி, தனது சக நண்பனிடம் ஒரு விஷயத்தை குறித்து விவரிக்கிறார். இதை கேட்கும் மற்ற ஆன்லைன் மாணவர்கள் சுவாரஸ்யத்தில் மூழ்கிவிடுகின்றனர். மாணவி சொல்ல சொல்ல மொத்த வகுப்பும் சிரிப்பலையிலும், வெட்கத்திலும் மூழ்கிவிடுகிறது.
அதாவது, ஸ்வேதாவின் நண்பர் ஒருவருக்கு ஒரு பெண்ணை பிடித்துள்ளது. ஆனால் அந்த பெண் ஸ்வேதாவின் நண்பரை உடலுறவுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார். ஆனால் அந்த நண்பரோ, அப்பெண்ணின் அணுகுமுறை தெரிந்திருந்தும் காதலித்து வருகிறார். அப்பெண் குறித்து நண்பனிடம் பல முறை ஸ்வேதா எடுத்து கூறியும், அவருடைய நண்பர் அந்த பெண்ணை விடுவதாக இல்லை என மாணவி ஸ்வேதா, தனது நண்பனிடம் வருத்தம் தெரிவிக்கிறார். அதற்கு அந்த நண்பன், தனக்கு இப்படியொரு தோழி இருப்பதாகவும், அவர்கள் சந்திக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது வாடிக்கை என்று மறுமொழி கூறுகிறார். தவிர, ஸ்வேதா தனது உரையாடலை முடிக்கும் போது, இது மிகவும் ரகசியமான செய்தி, யாரிடம் கூறிவிட வேண்டாம் என்று சக நண்பனிடம் கூறுகிறார்.
Everyone in group :- please turn off your mic shweta 👀.
— Karan Arya (@mrkaranarya) February 18, 2021
Meanwhile Shweta :- pic.twitter.com/eQyMbi9usE
ஆனால் ஸ்வேதா ரகசியமாக நண்பனிடம் கூறியது, ஆன்லைன் வகுப்பில் இருந்த 112 பேருக்கும் தெரிந்துவிட்டது. ஸ்வேதா இப்படியொரு விவகாரத்தை பேசுகிறார் என்று தெரிந்த பலரும், “ஸ்வேதா மைக்கை அணை”, ”ஸ்வேதா உன்னுடைய மைக் பயன்பாட்டில் உள்ளது” என்று கத்தியுள்ளனர். ஆனால் எதுவும் ஸ்வேதாவுக்கு அவருடைய நண்பருக்கும் கேட்கவில்லை. காரணம் மைக்கை ஆஃப் செய்வதாக நினைத்துவிட்டு, தன்னுடைய சிஸ்டத்தின் ஸ்பீக்கரை அவர் அணைத்துள்ளார். இதனால் இந்த சம்பவம் முழுவதையும், மொத்த வகுப்புக்குமே கேட்டுவிட்டது. ஸ்வேதாவின் உரையாடலை பதிவு செய்து இணையத்தில் பதிவிட, அது சிறிதுநேரத்தில் வைரலானது. மேலும் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு மீம்ஸுக்கள், ட்ரோல்ஸுகள் உருவாக்கப்பட்டு மேலும் வைரலானது.
ffs shweta 😭 pic.twitter.com/93v9OugB27
— Savage (@CutestFunniest) February 18, 2021
ட்விட்டரில் பல நாட்களுக்கு பிறகு, சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹேஷ்டேக் தேசியளவிலான டிரெண்டிங்கில் நான்காவது இடத்தில் இருந்தது ‘ஸ்வேதா’ தான். முன்னதாக ‘காண்ட்ராக்டர் நேசமணி’ ஹேஷ்டேக்கும் சம்மந்தமே இல்லாமல் உலகளவிலான டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து ஒரு கலக்கு கலக்கியது குறிப்பிடத்தக்கது.

