Theme Check

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை !! இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை !! இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை !! இன்றைய நிலவரம் என்ன?
X

கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து, ரூ.4,676-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 76,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.75,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it