ஜனவரி 1 முதல் வங்கியில் அதிக கட்டணம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
ஜனவரி 1 முதல் வங்கியில் அதிக கட்டணம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

பணத்தை எடுப்பது, டெபாசிட் செய்வது ஆகியவற்றுக்கான கட்டணங்களை உயர்த்துவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் அனுப்பினாலோ, பணம் டெபாசிட் செய்தாலோ அதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் (Basic savings account) ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக நான்கு முறை மட்டுமே இலவசமாக பணத்தை எடுக்க முடியும். ஐந்தாவது முறை எடுத்தால் அதற்கு குறைந்தபட்சம் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. அடிப்படை சேமிப்பு கணக்குகள் தவிர மற்ற சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகளில் ஒரு மாதத்தில் ரூ.25,000 வரையில் எடுத்தால் அதற்குக் கட்டணம் கிடையாது. அதைத் தாண்டி எடுக்கும் போது 25 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.

டெபாசிட்டைப் பொறுத்தவரையில், அடிப்படை சேமிப்புக் கணக்கு தவிர மற்ற சேமிப்புக் கணக்குகளில் இரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.10,000 வரையில் டெபாசிட் செய்யலாம். அதைத் தாண்டி டெபாசிட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் இணைப்புடன் கூடிய பேமெண்ட் அமைப்பில் (AEPS) இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

