ஹிஜாப் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்!!
ஹிஜாப் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில், நீதிபதிகள் கிருஷ்ண தீட்ஷித், ஜே.எம். காஜி ஆகியோர் அடஙகிய அமர்வு பிப்ரவரி மாதம் விசாகரணை தொடங்கியது.
விசாரணை தொடங்கி முதல் நாளிலேயே ஹிஜாப் அணிய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் 11 நாட்களாக இந்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், “ஹிஜாப் அணியும் விவகாரத்தில் அரசு பிறபித்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஹிஜாப் என்பது முஸ்லிம் சமூகத்தில் ஒரு அவசியமானதாக கருத முடியாது. எனவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி இல்லை,. அனைத்து மாணவர்களும் ஓன்றே என்பதை வலியுறுத்தும் வகையில் சீருடைகளை அணிந்து வரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மோசமானது என்று தெரிவித்த மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞரான ஏ.எம் தார், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இஸ்லாமில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமானது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வோம்” என்றார்.

