நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்!!
நடைபயிற்சி சென்ற பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து சில்மிஷம்!! வெறிபிடித்த இளைஞருக்கு வலைவீச்சு

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி நகர் பகுதியில் வசிப்பவர்கள் தினசரி அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 5.45 மணியளவில் ஒரு இளம்பெண் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவரை பின் தொடர்ந்துள்ளார். அதனை உணர்ந்த அப்பெண் வேகமாக சென்றப் போதும், விடாத அந்த இளைஞர் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்து திடீரென அந்த பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்துள்ளார். 
இதை சற்றும் எதிர்பாராத இளம்பெண் அதனை தடுக்க முயன்று கூச்சலிட்டுள்ளார். இதனால், அருகில் இருந்தவர்கள் அங்கு வந்ததை அறிந்த இளைஞர் இளம்பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாள்தோறும் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்ளும் நிலையில் குற்றவாளியை பிடித்து தண்டிப்பதோடு, அங்கு காலை மற்றும் மாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்கு பாதுகாப்பை உணரச் செய்வதே ஆண்கள் அளிக்கும் பரிசாக இருக்கும்.
newstm.in


