முதலமைச்சரை விட 5 மடங்கு பணக்காரர் ஆன அவரது மகன்!!
முதலமைச்சரை விட 5 மடங்கு பணக்காரர் ஆன அவரது மகன்!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை விட அவரது மகன் 5 மடங்கு பணக்காரராக இருப்பது தெரியவந்துள்ளது.
பீகார் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.
அதில் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக 29,385 ரூபாயும், வங்கிக் கணக்கில் 42,763 ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகன் நிஷாந்த் ரொக்கமாக 16,000 ரூபாயும், வங்கிக் கணக்கில் 1 கோடியே 28 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக வைத்துள்ளார்.

நிதிஷ் குமாரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 75 லட்சமாக உள்ள நிலையில், அவரின் மகனின் சொத்து மதிப்போ 3 கோடியே 60 லட்சமாக உள்ளது. கிட்டத்தட்ட 5 மடங்கு முதல்வரை விட அவரது மகன் பணக்காரராக உள்ளார்.
முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புது டெல்லியில் உள்ள துவாரகாவில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு குடியிருப்பு உள்ளது. அவரது மகனுக்கு கல்யாண் பிகா மற்றும் ஹக்கிகத்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலம் மற்றும் வீடுகள் உள்ளன.

துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி இருவரும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிவித்துள்ளனர்.நிதிஷ் குமாரின் அமைச்சரவை சகாக்களும் முதலமைச்சரை விட பணக்காரர்கள் ஆக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

