தமிழகத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ..!!
தமிழகத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை, அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியானது. இதனால் மாணவர்கள் மும்முரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதுவதற்காக 20.03.2022 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு வர கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த கூட்டம் மட்டுமே அன்று நடைபெற வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளதால் இன்று 19.03.2022 சனிக்கிழமையன்று தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

