Theme Check

மழை காரணமாக இன்று இங்கெல்லாம் விடுமுறை அறிவிப்பு!!

மழை காரணமாக இன்று இங்கெல்லாம் விடுமுறை அறிவிப்பு!!

மழை காரணமாக இன்று இங்கெல்லாம் விடுமுறை அறிவிப்பு!!
X

கனமழை பெய்து வருவதால் இன்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதேபோல மதுரையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், ஆரப்பாளையம், கே புதூர், அண்ணா நகர், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

school leave 1

காலை முதல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it