Theme Check

விடுமுறை ரத்து.. உடனே பணிக்கு திரும்புங்க.. காவலர்களுக்கு முதல்வர் உத்தரவு..!

விடுமுறை ரத்து.. உடனே பணிக்கு திரும்புங்க.. காவலர்களுக்கு முதல்வர் உத்தரவு..!

விடுமுறை ரத்து.. உடனே பணிக்கு திரும்புங்க.. காவலர்களுக்கு முதல்வர் உத்தரவு..!
X

அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையையும் மே 4-ம் தேதி வரை ரத்து செய்வதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எஸ்.எச்.ஓ., சி.ஓ., மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரிகள் முதல், மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர் வரையிலான அனைத்து நிர்வாக/காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை மே 4-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எனவே, தற்போது விடுப்பில் உள்ள அனைத்து காவல்துறையினரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Uttar Pradesh CM Yogi Adityanath tests positive for Covid-19, goes into  isolation - Coronavirus Outbreak News
வரும் நாட்களில் பண்டிகைகள் வர உள்ளதை முன்னிட்டு இந்த உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். மேலும், வரவிருக்கும் பண்டிகைகளின் போது அமைதியை நிலைநாட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் மதத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு காவல் நிலையம் முதல் ஏடிஜி வரையிலான அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவலர் படைகளை நிறுத்துதல், நிலைமையை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பயன்படுத்துதல் மற்றும் காவல்துறை வாகனங்கள் செயலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
Share it