இந்த மாவட்டத்திற்கு நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!
இந்த மாவட்டத்திற்கு நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. இங்கு, இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டின் கந்தூரி விழா நாளை (டிச. 15ம் தேதி) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறை நாளை சரி செய்யும் பொருட்டாக, அடுத்த மாதம் 8ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

