கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை ரத்து.!
கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை ரத்து.!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 19 முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் 24ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை அளிப்பார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக்கல்வி இயக்கக இணை இயக்குநர்கள் நாளை பணிக்கு வருகை தர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க நாளை அனைவரும் தவறாது பணிக்கு வருகை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Next Story

