Theme Check

பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்.13ஆம் தேதி விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்.13ஆம் தேதி விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்.13ஆம் தேதி விடுமுறை
X

தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்டுள்ளார். தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி, ஏப்ரல் 13 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவித்து, ஆணை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக, மே 14 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இல் கீழ் வராது என்பதால், மாவட்டக் கருவூலம், அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

fgஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it