பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை..!
பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்படும். புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு, தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், பாடத்திட்டங்கள் முடிக்க முடியாத நிலை இருப்பதாலும் அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.
அதில், ‘வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக விடுமுறை அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

