ஜனவரி 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!
ஜனவரி 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், இன்று முதல் வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் குளிர் கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகின்றன. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (31ம் தேதி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர் கால விடுமுறைக்கு பிறகு, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
பெற்றோரின் ஒப்புதலுடன் நேரடி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும் என உத்தரப்பிரதேச மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த கல்வி ஆண்டில் மட்டும் மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் மே மாதம் 21-ம் தேதி முதல் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

