தொடர் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !!
தொடர் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !!

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்ககூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியிருந்தது.

இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. தொடர் கனமழையால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் மழை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பினர்.
newstm.in

