Theme Check

நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு !!

நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு !!

நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு !!
X

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடைபெறும் நாளான வருகிற 19ஆம் தேதி (நாளை மறுதினம்) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school student

அதேநேரத்தில் நாளை (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர, பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். ஆனால், 50 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் 18ஆம் தேதியன்று விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it