4 மாவட்டங்கள் முழுவதும் விடுமுறை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
4 மாவட்டங்கள் முழுவதும் விடுமுறை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து அரசு அலுவலகங்கள், மற்றும் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

