Theme Check

செவ்வாய் கிழமை சம்பளத்துடன் விடுமுறை! தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

செவ்வாய் கிழமை சம்பளத்துடன் விடுமுறை! தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

செவ்வாய் கிழமை சம்பளத்துடன் விடுமுறை! தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
X

தமிழகத்தில் ஏப்ரல்6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் அனைத்து தொழிற்சாலைகளும் தமது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்புவழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தொழிலாளர் உதவி ஆணையர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்தல் நாளன்று அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பணிபுரியம் பணியாளர்களுக்கும், அனைத்து தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

இதை உறுதி செய்யும் வகையிலும் இது குறித்து புகார் அளிக்கவும் வசதியான முறையில் சென்னையில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it