காதல் கணவருக்காக ஹோம்லி நடிகை செய்த துணிச்சல் காரியம்..!
காதல் கணவருக்காக ஹோம்லி நடிகை செய்த துணிச்சல் காரியம்..!

காதலர் தினம் முடிந்துவிட்டாலும், அது நம்முள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. சமூகவலைதளங்களில் பலரும் இன்னும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே திருமணமானவர்கள், புதியதாக திருமணம் செய்யவிருப்பவர்கள், காதலர்களாக மாறியவர்கள், அன்பு ஜெயிக்கும் என நம்புக்கிறவர்கள் உட்பட அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.பிரபல நடிகை ஒருவர் காதலர் தினத்தில் கணவருக்கு அளித்த பரிசு பலரையும் கவர்ந்துள்ளது. சில விமர்சனங்கள் எழுந்தாலும் காதலர் தினத்தை வேறு எப்படி தான் திருமணமானவர்கள் கொண்டாடுவது என்கிற கேள்வியும் அதனூடே கேட்க தோன்றுகிறது.
சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல புகழடைந்தவர் சுஜா வருணி. பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மேலும் பிரபலமானார். எனினும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் 2018ம் ஆண்டு நடிகர் சிவாஜியின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

திருமணத்திற்கு பிறகு சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் சுஜா. அவருடைய அன்றாட செயல்களை பதிவிடுவது, புதியதாக அம்மானவர்கள் தங்களுடைய உடல்நலனில் எவ்வாறு அக்கறை கொள்ள வேண்டும், அழகு பராமரிப்பு குறித்த துணுக்குள் உள்ளிட்ட் பல்வேறு விஷயங்களை பதிவிட்டு எப்போதும் தனது சோஷியல் மீடியா பக்கங்களை படு பிஸியாக வைத்துள்ளார்.
எல்லோரையும் போல கணவர் சிவக்குமாருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சுஜா, அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன் “என்றென்றும்” என்கிற வார்த்தையை அவர் பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட கொண்டாட்டத்தை இப்படி பொதுவெளியில் காட்டலாமா என கேள்விகள் எழுந்தாலும், சுஜா வருணி மற்றும் சிவக்குமார் தம்பதிக்கு பலரும் காதலர் தின வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்துள்ளனர்.


