நம்பிக்கை.. கொரோனா தினசரி பாதிப்பு 2ஆவது நாளாக லட்சத்துக்கும் கீழ் குறைந்தது!!
நம்பிக்கை.. கொரோனா தினசரி பாதிப்பு 2ஆவது நாளாக லட்சத்துக்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு அண்மைக்காலமாக இறங்குமுகத்தில் உள்ளது. பல்வேறு மாநிலங்கள் ஊரங்கு விதித்து கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றியது முக்கிய காரணாக உள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு இரண்டாவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று(புதன்கிழமை) காலை வரையிலான 24 மணி நேரத்தில். நாடு முழுவதும் தினசரி தொற்று பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,89,069 ஆக உள்ளது.

நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,31,415 -ஆக குறைந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 1,62,664 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,75,04,126 -ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 2219 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 3,53,528 -ஆக அதிகரித்துள்ளது. தொடா்ந்து தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவத்துறையினரும் மக்களும் ஆறுதல் அடைந்துள்ளனர். இதன்மூலம் தேசியளவில் குணமடைவோா் சதவீதம் 94.29 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 37.1 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 23.90 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

