Theme Check

மகனை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர தாய்!! உடல்பாகங்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல்துறை!!

கம்பம் அருகே, பெற்ற மகனையே தனது இளைய மகனுடன் சேர்ந்து தனது மூத்த மகனைக் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி அம்மாவும் பையனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் தலை, கை , கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் சடலம்

மகனை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர தாய்!! உடல்பாகங்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல்துறை!!
X

கம்பம் அருகே, பெற்ற மகனையே தனது இளைய மகனுடன் சேர்ந்து தனது மூத்த மகனைக் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி அம்மாவும் பையனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் தலை, கை , கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

மகனை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர தாய்!! உடல்பாகங்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல்துறை!!

அதிகாலை நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கம்பம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த உடலில் கை, கால், தலை இல்லாததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்த இருந்த சிசிடிவியில் பதிவான வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். விசாரணையில் கம்பம் மருவரசி மஹால் 15 வது வார்டை சேர்ந்த செல்வி என்பவர் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு போலீசார் விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்டது செல்வியின் மகன் என்பதை கண்டுபிடித்தனர். மேலும் செல்வி தனது இரண்டாவது மகன் பரத்துடன் சேர்ந்து, மூத்த மகன் விக்னேஷைக் கொடூரமாக கொலை செய்தார் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், விக்னேஷ் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தான். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மகனை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர தாய்!! உடல்பாகங்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல்துறை!!

மேலும் கொலை செய்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து செல்வி மற்றும் அவரது இளைய மகனை கைது செய்தனர். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மகனை தாய் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it