Theme Check

கொடூரம்! 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!!

கொடூரம்! 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!!

கொடூரம்! 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!!
X

திருவாரூர் அருகே 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொத்தனார் வேலை செய்துவரும் ராஜேந்திரன் என்பவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 1088 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளித்தனர்.

abuse 1

அதனைத் தொடர்ந்து திருவாரூர் குழந்தைகள் பாதுகாப்பு நல சமூக பணி உறுப்பினர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில் ராஜேந்திரன் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல சமூக அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

pocso

அதன் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை தேடிவருகின்றனர்.

newstm.in

Next Story
Share it