கொடூரம்! ஒரு வயது மகளை உயிருடன் புதைத்து கொன்ற தந்தை!!
கொடூரம்! ஒரு வயது மகளை உயிருடன் புதைத்து கொன்ற தந்தை!!

மூன்று பெண் குழந்தைகள் என்பதால் ஒரு வயது மகளை அவரது தந்தை உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாடிவால்க் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஹூக்ஹி – காவேரி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தையே பிறந்தது.
இதனால் சுரேஷ் தொடர்ந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவரது நடத்தையிலும் சந்தேகித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்ட போது, மனைவியை தாக்கி, பெல்டால் கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார்.

பின்னர் கணவரிடமிருந்து தப்பித்து அவரது மனைவி உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து காவேரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூன்று பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் சுரேஷிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு ஆத்திரத்தில் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் ஒருவயது குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்தாக கூறியுள்ளார். இதைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை எடுத்து உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து பெற்ற மகளையே உயிரோடு கொலை செய்த தந்தை சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

