கொடூரம்! பெண்ணை கொன்று பாலியல் வன்கொடுமை!!
கொடூரம்! பெண்ணை கொன்று பாலியல் வன்கொடுமை!!

மதுபோதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்து இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த 16ஆம் தேதி தனியார் திரையரங்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இறந்து கிடப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் கொலை செய்யப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித் திரிந்தவர் என்றும், 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மயில் என்பதும் தெரியவந்துள்ளது.
அரை நிர்வாணமாக பெண்ணின் உடல் காணப்பட்டதால், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் அரவிந்த் குமார் என்பவரும், 17 வயதாகும் சிறுவனும் இணைந்து மதுபோதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொன்று பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.
newstm.in

