Theme Check

பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் கொடூரம்!! ஆசிரியரால் 4ஆம் வகுப்பு சிறுமிக்க

பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் கொடூரம்!! ஆசிரியரால் 4ஆம் வகுப்பு சிறுமிக்கு நிகழ்ந்த பயங்கரம்..

பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் கொடூரம்!! ஆசிரியரால் 4ஆம் வகுப்பு சிறுமிக்க
X

கோவை அரசு பார்வையற்றோர் சிறப்பு பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த, பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள, அரசு பார்வையற்றோருக்கான சிறப்பு மேல்நிலையில் பள்ளி உள்ளது. இங்கு கோவை உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 18 மாணவ - மாணவிகள், அங்கேயே தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் கொடூரம்!! ஆசிரியரால் 4ஆம் வகுப்பு சிறுமிக்க

இந்நிலையில், அப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது, இதனையடுத்து மருத்துவர்கள் அச்சிறுமியை சோதனை மேற்கொண்ட போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமி அளித்த தகவல் அடிப்படையில் ஆசிரியர் உதயகுமார் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது.

பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் கொடூரம்!! ஆசிரியரால் 4ஆம் வகுப்பு சிறுமிக்க

இதனையடுத்து இதுகுறித்த புகாரின் பேரில், ஆசிரியர் உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it