ஆஸ்பத்திரியின் அலட்சியம்.. பிறந்து 3 நாளே ஆன குழந்தை எறும்பு கடித்து பலி..!
ஆஸ்பத்திரியின் அலட்சியம்.. பிறந்து 3 நாளே ஆன குழந்தை எறும்பு கடித்து பலி..!

உத்தரப்பிரதேசத்தில், பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சீமா என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறப்புப் பிரிவில் எறும்புகள் அதிகளவு இருந்த நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்தது. இதையடுத்து, எறும்பு கடித்ததால் தான் குழந்தை பலியானதாக குழந்தையின் உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மருத்துவமனை ஊழியர்கள் தங்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

