தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் !!

தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் !!

தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் !!
X

திரைத்துறையில் ஹீரோ, வில்லன், அப்பா உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் மற்றும் பல்வேறு மொழிப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையில் தொலைக்காட்சி பக்கமும் அவருடைய கவனம் திரும்பியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி சீசன் 2’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி புதியதாக தொடங்கவிர்க்கும் நிகழ்ச்சி தான் ‘மாஸ்டர் செஃப் தமிழ்’. பல்வேறு உலக நாடுகளில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்தியில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சீசன்களை கடந்து இந்த நிகழ்ச்சி இந்தியில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தற்போது இதை தமிழுக்கு கொண்டுவரும் முனைப்பில் உள்ளது சன் டிவி.

அதன்படி இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் செயல்படவுள்ளார் விஜய் சேதுபதி. அவருக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட மிக பிரமாண்டமான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்காக விஜய் சேதுபதிக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.


ஆனால் இந்த நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளியை’ வீழ்த்துமா என்பது சந்தேகமே. காரணம் இந்நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ளவர்கள் அனைவரும் தொழில் ரீதியான சமையலர்களாக இருப்பவர்கள். ஆனால் குக் வித் கோமாளி கதையே வேறு. இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags:
Next Story
Share it