Theme Check

குடோனில் குவித்துவைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்.. வீட்டுக்கு வீடு ரூ.500 உடன் வருது !!

குடோனில் குவித்துவைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்.. வீட்டுக்கு வீடு ரூ.500 உடன் வருது !!

குடோனில் குவித்துவைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்.. வீட்டுக்கு வீடு ரூ.500 உடன் வருது !!
X

கோவையில் அதிகரித்து வரும் ஹாட்பாக்ஸ் கலாசாரத்தால் அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதி 62 வார்டில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனில் வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திமுகவினர் தான் பரிசுப்பொருட்களை வைத்துள்ளதாக கூறி, அதிமுகவினர் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கும், பறக்கும் படை அதிகாரகளிக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்த நிலையில், கதவை திறக்க வேண்டுமென அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தோட்டத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாக வராத காரணத்தினால் குடோனின் கதவு உடைக்கப்பட்டது. குடோனுக்குள் 13 பெரிய பெட்டிகளில் நூற்றுக்கணக்கா ஹாட் பாக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஹாட் பாக்ஸ்கிற்குள் பணம் வைத்து இருக்க கூடும் எனவும் எனவே அவற்றை திறந்து காட்ட வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.

hotbox

இதனையடுத்து அதில் இருந்த ஹாட்பாக்ஸ் திறந்து பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் பணம் எதுவும் இல்லை. இதனையடுத்து அதிகாரிகள் பரிசுபொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னரே அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் ஹாட்பாக்ஸ்களை பதுக்கி வைத்திருப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுப்பதாக தகவல் பரவியது. உடனே அப்பகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் அங்கு சென்றனர். அப்போது அவர்கள் அந்த ஹாட்பாக்ஸ்களை போட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது. கீழே கிடந்த ஹாட்பாக்ஸ்களை எடுத்து பார்த்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

hotbox

இதனையடுத்து இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கீழே கிடந்த ஹாட்பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Next Story
Share it