Theme Check

வெறும் ரூ.87-க்கு விற்கப்படும் வீடுகள்.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !!

வெறும் ரூ.87-க்கு விற்கப்படும் வீடுகள்.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !!

வெறும் ரூ.87-க்கு விற்கப்படும் வீடுகள்.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !!
X

புதிய வீடு வாங்க வேண்டும் என்பது ஏழை மக்களுக்கு எட்டாத கனியாகவே இருக்கும். ஏனெனில் நமது நாட்டில் சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும். இதுவே முக்கிய காரணமாகும். ஆனால் இங்கு வெறும் 87 ரூபாய் இருந்தால் போதும் உடனே வீடு வாங்க முடியும்.

italy home

இத்தாலியில் வெறும் ரூ.87 க்கு ஒரு வீடு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா நகர். இங்கு ஒரு யூரோவுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.87-க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

italy home

1968-ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனால் மென்சோ நகரத்தின் மக்கள் தொகை பெரியளவில் குறைந்தது. இதையடுத்து முன்பு போலவே இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டும் என்ற முயற்சியில், அரசே குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

italy home

எனினும் குறைந்த விலையில் வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28ஆம் தேதி வரை வழங்கப்படும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் முடிவை பொறுத்து காலியாக இருக்கும் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it