Theme Check

பெண்களைக் கொன்று நாய்களுக்கு உணவாக வீசும் அவலம்! தலிபான்கள் அட்ராசிட்டி!

பெண்களைக் கொன்று நாய்களுக்கு உணவாக வீசும் அவலம்! தலிபான்கள் அட்ராசிட்டி!

பெண்களைக் கொன்று நாய்களுக்கு உணவாக வீசும் அவலம்! தலிபான்கள் அட்ராசிட்டி!
X

கடந்த 20 ஆண்டுகளாக, தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கிடையே நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர்.

“கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல், பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு அவர்களுக்கு மதிப்பளிக்கப்படும்” என தலிபான்கள் உறுதி தெரிவித்துள்ளனர். அதேபோல், “எதிரிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும்” எனவும் கூறினர்.

ஆனால், உறுதி அளித்ததற்கு நேர்மாறாக தலிபான்கள் நடந்து கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, போரின்போது அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவியவர்களை தலிபான்கள் வீடு வீடாகத் தேடி அலைகின்றனர் எனக் கூறப்படுகிறது. மேலும், பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களை நாய்களுக்கு உணவாக வீசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஐநா ஒர் புலனாய்வு ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளது. ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை குறித்து ஏஎஃப்பி நிறுவனம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், ‘காபூல் விமான நிலையம் செல்லும் மக்களிடம் தலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தங்களின் பேச்சைக் கேட்டு நடக்காதவர்கள் மீது தலிபான்கள் ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்கி வருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
Next Story
Share it