Theme Check

90 வயது மூதாட்டிக்கு எப்படி? கொரோனா பாதிப்பால் மருத்துவ வல்லுநர்கள் அதிர்ச்சி !

90 வயது மூதாட்டிக்கு எப்படி? கொரோனா பாதிப்பால் மருத்துவ வல்லுநர்கள் அதிர்ச்சி !

90 வயது மூதாட்டிக்கு எப்படி? கொரோனா பாதிப்பால் மருத்துவ வல்லுநர்கள் அதிர்ச்சி !
X

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பெரும்பாலான நாடுகளில் கட்டுக்குள் வந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீரென வைரஸ் உருமாற்றம் அடைந்து மிகத் தீவிரமாக பரவத் தொடங்கியது.

இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்லா வைரஸ் மிகத்தீவிர தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உருமாறிய கொரோனாவிற்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, பீட்டா என பல வகையான வைரஸ்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டிக்கு இருந்த கொரோனா வைரஸால் மருத்துவ வல்லூநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது, 90 வயது மூதாட்டிக்கு ஆல்பா, பீட்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆல்பா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. பீட்டா தென்ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்டது.

இரண்டு வைரஸும் பெல்ஜியத்தில் பரவிய நிலையில், இரண்டு வெவ்வேறு நபர்களிடம் இருந்து அந்த பெண்ணிக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம். ஆனால், எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it