இந்த பெரிய வலிமை கிடைத்தது எப்படி..?: ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் பேட்டி..!
இந்த பெரிய வலிமை கிடைத்தது எப்படி..?: ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் பேட்டி..!

31 ஆண்டுகள் சிறைவாசத்தைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “அனைவருக்கும் வணக்கம். ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்’ என்பது திருக்குறள்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்.. கெட்டவர்கள் நன்றாக வாழ்வதும், செவ்வியான் கேடும்.. நல்லவர்கள் வீழ்ந்து போவது, துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை உலகம் நினைத்துப் பார்க்கும் என்பது பொருள்.
அது, இயற்கையின் நீதியா. இல்லை. நல்லவன் வாழணும், கெட்டவன் வீழ்வதுதான் நீதி. என்னுடைய சிறை வாழ்க்கையும் அதுபோலத்தான்.
என் விடுதலையை தமிழ் மக்களும், தமிழர்களும் நினைத்தார்கள். அன்பு செலுத்தினார்கள். ஆதரவு தெரிவித்தார்கள். தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள்.
31 ஆண்டு காலம் எங்கள் அம்மாவின் தியாகம், போராட்டம், ஆரம்ப காலங்களில் அவர் வெளியில் சந்தித்த அவமானங்கள், புறக்கணிப்புகள், வேதனை.. அதையெல்லாம் கடந்து, இடைவிடாது போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த பெரிய வலிமை கிடைத்தது எப்படி..? எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம், இந்த பெரிய வலிமையைக் கொடுத்தது என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
Next Story

