5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 'ஆதார்' பெறுவது எப்படி ?
வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றிற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெற முடியும். அதற்கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம். ஆதார் மையத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றிற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெற முடியும். அதற்கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம்.
ஆதார் அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பெற்றோர் தங்களின் ஆதார் அட்டையுடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சேர்த்து கொடுக்க வேண்டும். நகல் மட்டும் இல்லாமல் அசல் சான்றிதழ் எடுத்துச் செல்வது உகந்தது.
5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கை ரேகை, கருவிழிப்படலம் பதிவு செய்யப்படாது. அவர்களுக்கு நீல நிறத்திலான பால் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தைகளின் ஆதார் எண், பெற்றோரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பெற்றோர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை, பள்ளியில் இருந்து பெற்றப்பட்ட சான்று (Bonafide) ஆகியவற்றை ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
அப்போது குழந்தையின் கைரேகை, கருவிழிப்படல பதிவு எடுக்கப்படும். அந்த விவரங்கள் குழந்தையின் ஆதார் தகவலில் சேர்க்கப்படும். அதற்கு பிறகு குழந்தைக்கு 15 வயதாகும் போது மீண்டும் கைரேகை, கருவிழிப்படல பதிவு செய்யப்படும். அப்போது பெற்றோரின் ஆதார் அட்டையும் அவசியம்.
newstm.in