நடிகர் வடிவேலு உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !!

நடிகர் வடிவேலு உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !!

நடிகர் வடிவேலு உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !!
X

நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் கடந்த 23ஆம் தேதி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

vadivelu

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vadivelu

வடிவேல்-க்கு ஒமைக்ரான தொற்றுக் கூடிய அறிகுறிகள் அதாவது ஒமைக்ரான் பாதிப்புக்கு முந்தைய பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. எனினும் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் விரைவில் வடிவேல் குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ரசிர்களை மகிழ்விக்க `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it