Theme Check

பாம்பு காதலன் வாவா சுரேஷின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை தகவல் !!

பாம்பு காதலன் வாவா சுரேஷின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை தகவல் !!

பாம்பு காதலன் வாவா சுரேஷின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை தகவல் !!
X

பாம்பு கொத்திய நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாம்பு மீட்பரான வாவா சுரேஷ், நாடு முழுவதும் புகழ்பெற்றவர் ஆவார். கேரளாவில் வனத்துறையினரால் கூட பிடிக்க முடியாத பாம்பு என்றால், அந்த இடத்தில் வாவா சுரேஷ் இருப்பார். வனத்துறையினரே அவரிடம் நேரடியாக உதவி கேட்பர். அந்த அளவுக்கு பாம்புகளை பிடிப்பதில் வல்லவர் இவர்.

Vava_Suresh

இந்த நிலையில், கடந்த ஜனவரி 31 அன்று மாலை கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள குரிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்த ஒரு நல்ல பாம்பை மீட்கச் சென்றார். சில நிமிடங்களில் பாம்பைப் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் அதை பையில் போட முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு சுரேஷின் தொடைப் பகுதியில் பாம்பு கொத்தியது.

இதனால், உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கோட்டயம் காந்தி நகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலைக்கு சென்ற அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Vava_Suresh

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் கூறுகையில், வாவா சுரேஷ் வென்டிலேட்டர் உதவி இல்லாமலே சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. செவிலியர்களுடன் பேசுகிறார். மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார். அடுத்த 24- 48 மணி நேரத்திற்கு அவர் ஐசியூவில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர், என்று கூறியுள்ளார்.

பாம்பு மீட்பரான வாவா சுரேஷ், பாம்பு கொத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைந்து குணமடைய கேரளா மக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it