Theme Check

ஜனவரி மாதத்தில் இத்தனை விடுமுறை நாட்களா? குஷியில் மக்கள்!!

ஜனவரி மாதத்தில் இத்தனை விடுமுறை நாட்களா? குஷியில் மக்கள்!!

ஜனவரி மாதத்தில் இத்தனை விடுமுறை நாட்களா? குஷியில் மக்கள்!!
X

2022 ஜனவரி மாதம் ஏராளமான விடுமுறை நாட்கள் இருப்பதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வழக்கமாக ஜனவரி என்றாலே புத்தாண்டு நாள், பொங்கல், குடியரசு தினம் என விடுமுறை நாட்கள் அதிகம் இருக்கும். அந்த வகையில் வரும் ஜனவரி மாதமும் அதே போல் அதிக விடுமுறை நாட்கள் உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் அந்த விடுமுறை நாட்களை என்ஜாய் செய்ய முடியாத வகையில் கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. அதனால் கவனமுடன் இனிவரும் நாட்களை நாம் அனைவரும் எதிர் கொள்ள வேண்டும்.

இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த வகையில் ஜனவரி மாதம் விடுமுறை உள்ள நாட்களின் பட்டியலை பார்க்கலாம்.

ஜனவரி 1ஆம் தேதிசனிக்கிழமை - புத்தாண்டு தினம்

holiday

ஜனவரி 2ஆம் தேதிஞாயிற்றுகிழமை - மன்னம் ஜெயந்தி. கேரள பண்டிகை

ஜனவரி 9ஆம் தேதிஞாயிற்றுகிழமை - சண்டிகர், ஹரியானாவில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி

ஜனவரி 11ஆம் தேதிசெவ்வாய்கிழமை - மிஷனரி தினம். மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.

ஜனவரி 12ஆம் தேதிபுதன்கிழமை - மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி.

ஜனவரி 14ஆம் தேதிவெள்ளிக்கிழமை - மக் பிகு, மகர சங்கராந்தி, துசு பூஜை. இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 14ஆம் தேதிவெள்ளிக்கிழமை - தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை.

holiday

ஜனவரி 15ஆம் தேதிசனிக்கிழமை - பொங்கல் பண்டிகை/ திருவள்ளுவர் தினம். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படும்.

ஜனவரி 16ஆம் தேதிஞாயிற்றுகிழமை - கனும பண்டிகை, உழவர் திருநாள். ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும்.

ஜனவரி 23ஆம் தேதிஞாயிற்றுக்கிழமை - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் விடுமுறை.

ஜனவரி 25ஆம் தேதிசெவ்வாய்கிழமை - இமாச்சல பிரதேசத்தில் மாநில தினம்

ஜனவரி 26ஆம் தேதிபுதன்கிழமை - குடியரசு தினம்.

holiday

ஜனவரி 31ஆம் தேதி - திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை. அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படும்.

newstm.in

Next Story
Share it