எத்தனை தடவைதான் சோதனை நடத்துவீங்களோ..?: சிபிஐக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி..!
எத்தனை தடவைதான் சோதனை நடத்துவீங்களோ..?: சிபிஐக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி..!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
அத்துடன் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்..?” என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, “எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

