Theme Check

சாக்கு மூட்டையில் மனித எலும்புக் கூடுகள்.. அதிர்ச்சியில் காங்கேயம் மக்கள்..!

சாக்கு மூட்டையில் மனித எலும்புக் கூடுகள்.. அதிர்ச்சியில் காங்கேயம் மக்கள்..!

சாக்கு மூட்டையில் மனித எலும்புக் கூடுகள்.. அதிர்ச்சியில் காங்கேயம் மக்கள்..!
X

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஊதியூர் - தாராபுரம் ரோட்டில் இச்சிப்பட்டி பகுதியில் காற்றாலைகள் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாத இப்பகுதியில் நேற்று காலை இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, அதில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊதியூர் போலீசார், அவற்றை கைப்பற்றினர். இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது; யார் கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர் என எந்த விவரமும் தெரியவில்லை.

கொலை போன்ற சம்பவம் நடந்து, உடல்களை மறைக்க கொண்டு வந்து வீசப்பட்டதா, பில்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தியவையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம், இதே பகுதிக்கு அருகிலுள்ள நத்தக்காடையூரில், கீழ் பவானி பாசன வாய்க்காலில் மனித எலும்புக் கூடு ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல் கருக்கம்பாளையம் பிரிவில், வீட்டு மனைப் பிரிவில் இருந்த மேல்நிலை தொட்டியில் மனித எலும்புக்கூடு ஒன்றும், விலங்கு வேட்டைக்கு பயன்படும் சுருக்கு கம்பிகளும் கிடந்தன. இது போன்ற சம்பவங்கள் காங்கேயம் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

Next Story
Share it