Theme Check

குடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்! பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு! 5 பயங்கரவாதிகள் கைது!!

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம்.. மக்களோடு ஊடுருவிய பயங்கரவாதிகள் 5 பேர் கைது

குடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்! பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு! 5 பயங்கரவாதிகள் கைது!!
X

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தற்போதே கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய எல்லைப் பகுதிகளில் இந்த பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மத்திய காஷ்மீரில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்! பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு! 5 பயங்கரவாதிகள் கைது!!

அப்போது அங்கு பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடியரசு தினத்தன்று மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. 5 பேரிடமும் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. ஏற்கனவே நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களிலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரும் தாக்குதலும், பயங்கரவாதிகளின் நாசவேலையும் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் காஷ்மீர், லடாக் என அனைத்து இடங்களில் கண்காணிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it